தினமும் உங்க குழந்தை ஸ்மார்ட்போனிலேயே விளையாடுகிறார்களா..? அப்ப இத தெரிஞ்சிக்குங்கோ..!


ஸ்மார்ட்போன் ஒரு பூதம் மாதிரி நம்மை கவர்ந்து இழுத்து பாழுங்குழியில் தள்ளுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதை நீங்கள் அறிவீர்களா?

ஸ்மார்ட்போன் விளையாட்டுகள், வீடியோக்கள் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகளை நீங்கள் அறிவீர்களா? இதோ கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க…

இருந்த இடத்திலிருந்து இடையூறின்றி பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை, பொழுதுபோக்கு சாதனமாக எண்ணிவிடாமல் பிடித்துக் கொண்டதுதான் நாம் செய்யும் முதல் தவறு என்கிறார்கள் ஆய்வாளர்கள். மணிக்கணக்கில் நாம் ஸ்மார்ட்போனில் விளையாடுவதால் ஏற்படும் உடல் – மன மாற்றங்களை அவர்கள் பெரிய பட்டியலாக அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

அம்மாவின் ஸ்மார்ட்போன்தான் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுப் பொருளா? குட்டீஸ். “ஸ்மார்ட்போனில் வீடியோ பார்த்துக்கிட்டேதான் சாப்பிடுவேன்” “செல்போனை விளையாட கொடுத்தாத்தான், ஹோம் ஒர்க் பண்ணுவேன்னு” அடம்பிடிக்கும் அம்முக்குட்டியா நீங்கள்?


உங்களுக்கு வீடியோ வழியாக கதை சொல்லவும், ரைம்ஸ் காட்டுவதற்கும் ஆரம்பத்தில் அம்மா ஸ்மார்ட்போனை கொடுத்தார்கள், பாடங்களைக்கூட படங்களாக ஸ்மாரள்ட்போன் வழியே காட்டினார்கள். அதை ரசித்தீர்கள்.

ஆனால் இப்போது நீங்கள் படிப்பதற்குத் தவிர பொழுது போக்குவதற்காக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தவறு இல்லையா? அதை அம்மா சொல்லிக் காட்டினால், அப்பா கண்டித்தால் அடம் பிடிப்பது நியாயமா? கோபித்துக் கொள்வது முறையா? அம்மாவும், அப்பாவும் உங்கள் நன்மைக்காகத்தானே சொல்வார்கள் என்பதை புரிஞ்சுக்க மாட்டீங்களா குட்டீஸ்.

உங்களுக்கு செல்போனில் என்ன விஷயம் வேண்டுமானாலும் பிடித்திருக்கலாம், ஆனால் அதற்காக நேரம் காலமின்றி போன்களை கைகளில் வைத்து உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது உங்களுக்கு நல்லதில்லையே?

போன்கள் உங்கள் கைகளில் நீண்ட நேரம் இருப்பதால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது தெரியுமா.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!