தினமும் அளவுக்கு அதிகமாக பசிக்குகிறதா..? அப்ப அத முதல்ல படிங்க..!


பொதுவாக நாம் சிறுவர்களாக இருக்கும்போது, நம்முடைய அம்மாக்கள் என் பிள்ளை சரியாவே சாப்பிட மாட்டேங்குறான் என்று புலம்புவார்கள். அதுவே நன்றாக வளர்ந்தபின், ரசித்து ருசித்து சாப்பிட்டோமானால் என்னால உனக்கு வடிச்சு கொட்ட முடியல என்று புலம்புவது என்ற இரண்டையுமே நாம் பார்த்திருப்போம்.

ஆனால் இதற்கெல்லாம் நாம் தான் காரணமா?… நமக்கு பசி எடுப்பதற்கு ஜீரண மண்டலும் ஒரு காரணம். நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைந்தபிறகு தான் திரும்ப பசிக்க ஆரம்பிக்கும்.

செரிமானம் சரியாக ஆகவில்லையென்றால் வயிற்றுக்கோளாறுகள் உண்டாகும். நமக்கு அடிக்கடி பசிக்கிறது அதனால் நம்முடைய ஜீரண மண்டலம் மிகச்சரியாக வேலை செய்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அடிக்கடி பசித்தாலும் பிரச்னை தான். அதனால் எப்போதுமே உணவு விஷயத்தில் சிறிது கவனம் இருக்க வேண்டும்.


அளவுக்கு அதிகமாக பசி எடுக்கிறது என்று நினைப்பவர்கள் தங்கள் உணவில் அதிக அளவில் ஒமேகா3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அது ஹார்மோன் சுரப்பிகளை முறையாக செயல்படத் தூண்டும். அப்படி என்னென்ன உணவுகளில் அதிக அளவில் ஒமேகா3 நிறைந்திருக்கிறது?…

மீன்
பாதாம்
ஆலிவ் ஆயில்
வால்நட்
ஃபிஷ் ஆயில்
பட்டர் ஃபுரூட்

ஆகிய உணவுகளில் மிக அதிக அளவில் ஒமேகா3 நிறைந்திருக்கிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!