அச்சுறுத்தும் நிபா வைரஸ்… எப்படி பரவுகின்றது..?

தலைவலி தீவிரமாகி காய்ச்சலும் அதிகரிக்கும். 10 நாட்களுக்கு பிறகு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது.

கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று நிபா வைரசுக்கு 12 வயது சிறுவன் ஒருவர் பலியானார்.

நிபா வைரஸ் காற்று மூலம் பரவ வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை வவ்வால் மூலமும், மிருகங்கள் வாயிலாகவும் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பறவைகள் கடித்துபோட்ட பழங்களை உண்ண வேண்டாம் எனவும் சுகாதார துறையினர் எச்சரித்து உள்ளனர்.

நோய் அறிகுறி:-

1.நிபா வைரஸ் முதலில் லேசான தலைவலியுடன் ஆரம்பமாகும்.

  1. தலைவலி தொடர்ந்து நீடிக்கும்.
  2. தொடர்ந்து வாந்தி வருவது போல இருக்கும்.
  3. வாந்தியுடன் லேசான மயக்கமும் ஏற்படும்.
  4. மயக்கத்தில் இருந்து மீள முடியாத நிலை ஏற்படும்.
  5. நாள் முழுக்க உடல் சோர்வுடன் மயக்கமாகவே காணப்படும்.

7.தலைவலி தீவிரமாகி காய்ச்சலும் அதிகரிக்கும். 10 நாட்களுக்கு பிறகு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

  1. நோயின் தீவிரம் குறையாமல் தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

தவிர்க்க வேண்டியவை:-

  1. பறவைகள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக் கூடாது.
  2. பறவைகள் கடித்து போட்ட பழங்களை ஒருபோதும் உண்ணக்கூடாது.

3.முக கவசம் அணிவது போல் கைகளுக்கும் கையுறை அணிய வேண்டும்.

  1. நோய் பாதிப்பு உள்ள மிருகங்களுடன் பழக கூடாது.
  2. மிருகங்களையோ அல்லது பறவைகளையோ தொட்டால் உடனே கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

6.மிருகங்கள், பறவைகளின் எச்சத்தை மிதித்தால் உடனே உடலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

  1. வவ்வால் மூலமே இந்நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த பறவைகள் இருக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  2. பன்றிகள் மூலமும் இந்நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் அவற்றிடமும் கவனமாக இருக்க வேண்டும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!