ஸ்பெயின் நிபுணர்கள் தயாரித்துள்ள ‘ரோபோ’ பற்றிய சில அதிர்ச்சித் தகவல்கள்…!


பல்வேறு துறைகளில் அசத்தி வரும் ‘ரோபோ’க்கள் தற்போது மனிதர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்தகைய ‘ரோபோ’வை ஸ்பெயின் நிபுணர்கள் தயாரித்துள்ளனர். உலகில் அனைத்து பணிகளையும் செய்ய எந்திர மனிதன் எனப்படும் ‘ரோபோ’க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அவைகள் மனிதர்கள் செய்யக்கூடிய பணிகளை வேகமாகவும் அதி விரைவாகவும் செய்கின்றன. பல்வேறு துறைகளில் அசத்தி வரும் ‘ரோபோ’க்கள் தற்போது மனிதர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்தகைய ‘ரோபோ’வை ஸ்பெயின் நிபுணர்கள் தயாரித்துள்ளனர்.


அந்நாட்டில் உள்ள வல்லா போலித் பல்கலைக்கழகம் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘ரோபோ’விடம் நாம் சந்தேகப்படும் வியாபாரம் குறித்தோ, திட்டம் குறித்தோ தகவல் கொடுத்தால் அதில் ஊழல் நடந்து இருக்கிறதா? இல்லையார்? என்பது கண்டறியப்படும்.

இந்த ‘ரோபோ’வில் இதுவரை நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்த தகவல்கள் உள்ளது. அதையும், நாம் கொடுக்கும் தகவலையும் அது சரிபார்க்கும். அதே போன்று அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அந்த கட்சியின் செயல்பாடு, அவர் பேசியது, அந்த ஊழல் குறித்து அவர் கூறியது என அனைத்தையும் அந்த ரோபோ சரிபார்க்கும்.

இதன்மூலம் ஊழல் கண்டுபிடிக்கப்படும். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ‘ரோபோ’வில் ஸ்பெயினில் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து நடந்த ஊழல் குறித்த தகவல்கள் ‘மெமரி’யில் ஏற்றப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் நடந்த பெரிய குற்றங்கள் குறித்த தகவலும் அதில் ஏற்றப்பட்டுள்ளது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!