இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்திய புதிய வசதி..!


ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மற்றும் செல்பி பிரியர்களுக்கு நிச்சயம் இன்ஸ்டாவில் ஒரு அக்கவுண்ட் இருக்கும். இன்ஸ்டகிராம் என்பது பொதுவாக போட்டோ விடியோக்கள் ஷேர் செய்துகொள்ள உருவாக்கப்பட்ட பிரத்யேக அப்ளிகேஷன்.

இதற்கு முன்பு வரை நாம் பதிவேற்றும் போட்டோக்களை நம்மை ஃபாலோ செய்பவர்கள் அனைவரும் பார்க்க முடியும். அதேபோல், நாம் ஃபாலோ செய்பவர்கள் பதிவிடும் போட்டோக்கள், விடியோக்கள் அனைத்தும் வந்து நம்முடைய பக்கத்தை நிரப்பிவிடும்.

இதற்காகவே இன்ஸ்டகிராம் ஒரு புதிய அறிமுகப்படுத்தவிருக்கிறது. பேஸ்புக் போலவே நமக்கு விருப்பமான சில போட்டோ, விடியோக்களை மட்டும் நமக்கு காட்டி நமக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்கும்.

அதற்காகவே பேஸ்புக்கில் உள்ளது போன்று இன்டகிராமிலும் ரெக்கமண்டட் ஃபார் யு என்றும் ஆப்ஷன் வரவிருக்கிறது.

அதன்மூலம் நமக்கு விருப்பமானவற்றை நம்மால் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

இதில் 5 போஸ்ட்கள் வரை லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த பயன்பாடு பிளாக் செய்யப்படவில்லை. பக்க வடிவமைப்பு முடியும் வரை தற்காலிகமாக ஹைடு செய்யப்பட்டிருக்கிறது.

இன்ஸ்டா பக்கத்தின் வலதுபக்க ஓரத்தில் தற்காலிகமாக மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்தால் இந்த ரெக்கமண்டட் ஃபார் யு வசதியைப் பெறலாம்.-tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!