சரும புற்றுநோயின் அறிகுறிகள் என்ன.? எப்படி தவிர்க்கலாம் தெரியுமா..?


புற்றுநோயின் அபாயம் பற்றி பொதுவாக நம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். குறிப்பாக, எந்தெந்த இடங்களில் வரும் என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மது, புகைப்பழக்கம், புகையிலை, முறையற்ற உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகிய பல காரணங்களால் புற்றுநோய் உண்டாகிறது.

ஓரிடத்தில் வரும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும் என்று சொல்வார்கள். இதற்கு மருந்தே இல்லாத நிலையெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது.

ஆனால் மருத்துவத் துறை முன்னேற்றத்தால் புற்றுநோய்க்கு சிறப்பு மருத்துவமனைகளும் ஆய்வுக்கூடங்களும் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

குடல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் இப்படி பல வகை புற்றுநோய்கள் உண்டு. அதேபோல் சருமப் புற்றுநோயிலும் பல வகையுண்டு.

குறிப்பாக அதிகமாக புகையிலை பயன்படுத்துவதால், வாய், உதடு, கன்னம், நாக்கு போன்றவற்றிலும் புற்றுநோய் உண்டாகும்.


அவ்வாறு உண்டாகும் புறு்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்?…

எந்தெந்த வகையிலெல்லாம் புகையிலை பயன்படுத்துகிறீர்களோ அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை முற்றிலும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்கின் புரொடக்க்ஷன் க்ரீம் உபயோகப்படுத்துவது நல்லது. சருமத்தை புறஊதா கதிர்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வாய் மற்றும் பற்களை தொடர்ந்து மருத்துவர்களிடம் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

சரிவிகித உணவு எடுத்துக் கொள்வது மிகமிக அவசியம். குறிப்பாக, காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்வது மிக அவசியம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!