கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என தெரியுமா..? உஷாராவே இருங்க..!


மிகவும் கவனமாக விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் கையாள வேண்டிய ரிப்பேர் வேலை கேஸ் ஸ்டவ் சம்பந்தமானவை. சில கேஸ் ஸ்டவ்களில் ‘சிம்’மில் வைத்தால் ஜ்வாலை அணைந்துவிடும். பர்னர் மிக்சிங் டியூபுடன் இணையும் இடத்தில் உள்ள சிறு துவாரங்கள் தடைப்பட்டால் இப்படி நடக்கலாம்.

அதேபோல பர்னரில் உள்ள துவாரங்கள் சுத்தமாக இல்லாவிட்டாலும் சிம்மில் வைத்தால் அணைந்துவிடும்.சரியானபடி சுத்தம்செய்தால் இந்த குறை நீங்கி விடும்.

நீலமான ஜூவாலைக்குப் பதிலாக மஞ்சளாக சில சமயம் எரியும். கேஸ் – காக் சரியான கோணத்தில் அமையாமல் இருந்தால் இந்த குறை நேரும். எனவே சரியான கோணத்தில் அமைக்க வேண்டும். ஜெட் பகுதியில் உள்ள துவாரத்தின் அளவு பெரியதாக இருந்தாலும் மஞ்சள் நிறமாக இருக்கும். ஜெட் பகுதியை மாற்றுவது அப்போது அவசியமாகி விடும். பர்னர் அல்லது மிக்ஸிங் டியுபில் தூசி அடைத்துக்கொண்டிருந்தாலும் இந்த குறை நேரலாம் அழுக்குகளை நீக்க வேண்டிய தேவை எற்படுகிறது.

சில சமயம் விபரீதமாக பர்னரில் மட்டுமில்லாமல் ‘ஆன்’செய்ய பயன்படும் ஸ்விட்சின் அருகே கூட ஜூவாலை எரியும் இதை பேக் ஃபயர் என்பார்கள்.ஸ்விட்சிலிருந்து பர்னருக்கு செல்லும் ஸ்பிரிங் தவறான திசைக்கு திரும்பி இருந்தாலோ அந்த பகுதியில் உள்ள நிட்டிங் பின் அதிகமாக இறுக்கப்பட்டிருந்தாலோ இந்த நிலை நேரலாம். குறிப்பிட்ட பகுதியை மாற்றுவது மற்றும் கிரிஸ் ஆகியவற்றின் மூலம் இதை தடுக்கலாம்.


பர்னரில் உள்ள அழுக்குகளை நீக்க குண்டுசிகளால் குத்த வேண்டாம். இதனால் துளை பெரிதாகி ஜூவாலை அதிகமாகும். சிறிது நேரம் பர்னரை மண்ணெண்ணையில் ஊறவைத்து நைலான் பிரஸ் கொண்டு சுத்தம் செய்யவும்.

கேஸ் காக் பகுதியையும் குத்தி பெரிதாக்கி விடாதீர்கள். இதனால் ஜூவாலை சிம்மில் வைத்தாலும் பெரிதாக எரியும்.

கேஸ் லீக் ஆகிறது என்றால் அது ரெகுலேட்டரில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக இருக்கலாம் அல்லது தேய்ந்து போன கேஸ் காக் பகுதியாலும் இருக்கலாம். அப்போது அந்த பகுதியை மாற்ற வேண்டும்.

சிலிண்டரில் இருந்து டியூபுக்கு கேஸை அனுப்ப நாம் திருகும் பகுதியின் அருகே உள்ள பகுதியில் கிரீஸ் குறைந்துபோய் அதனாலும்கூட கேஸ் லீக்காகலாம். அப்போது இன்னொறு கோட்டிங் கிரீஸ் கொடுக்க வேண்டியது தான்.

பர்னரை அடுப்பில் இருந்து எடுத்து, அதனை சூடான சோப்பு நீரில் 1 மணி நேரம் ஊற வைத்து, பின் ஊசியால் ஒவ்வொரு ஓட்டையையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் பேக்கிங் சோடாவை பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு தேய்த்து, சுத்தமான நீரில் கழுவினால், பர்னர் நன்கு சுத்தமாக இருக்கும். பின்பு அதனை நன்கு உலர வைத்து, அடுப்பில் பொருத்த வேண்டும்.

அடுப்பின் மேல் பேக்கிங் சோடாவை தூவி, அதன் மேல் லேசாக சுடுநீரை தெளித்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்தால், அடுப்பின் மேல் உள்ள எண்ணெய் பசை எளிதில் நீங்கிவிடும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!