உடலில் கெட்ட கொழுப்புகள் தேங்குவதை தடுக்கும் பட்டாணியும் ப்ரக்கோலியும்… இப்படி சாப்பிடுங்க..!


உடல்பருமன் பிரச்னை அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மிக அதிகம். அவற்றை சமாளிக்க உணவுக்கட்டுப்பாடு அறிவுறுத்தப்படுகிறது.

என்னென்ன மாதிரியான உணவுகள் உண்பதால், உடல்பருமனைத் தவிர்க்க முடியும்?…

உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலே உடல்பருமனை எளிதில் தவிர்க்க முடியும்.

குறிப்பாக, நார்ச்சத்துக்கள் மிகுதியாகக் கொண்ட ப்ரக்கோலி, பட்டாணி, நெல்லிக்காய், பேரிக்காய், தேங்காய், அத்திப்பழம் போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டாலே உடல்பருமன் என்னும் கொடிய அரக்கனை வீழ்த்திவிட முடியும்.

மெட்டபாலிசம் சீராக இல்லாதது தான் ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்குதல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன.

தற்போது ஹை-ஃபேட் டயட் மூலம் உடல்பருமன் குறையும் என தவறான வதந்தி பரப்பப்பட்டுக் கொண்டு வருகிறது. அதை ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.

ஹை-பேட் டயட் உடல்பருமனை அதிகரிக்கவே செய்கிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் தான் உடல்பருமனைத் தடுக்கின்றன என்றும் குறிப்பிடுகிறார்கள்.-Source: tamil.eenaduindia

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05