ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி சிறப்பு சலுகை அறிவிப்பு…!


ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.98 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலை தினந்தோரும் அதிகரித்து வந்தாலும் மொபைல்போன் சார்ந்த அழைப்பு, இண்டர்நெட் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.

இதன் காரணமாக குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் ஏதேனும் நிறுவனம் விலை குறைப்பு அல்லது பழைய விலையில் கூடுதல் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் போட்டிப்போட்டு கொண்டு தங்களது விலையை அதிரடியாக குறைத்து வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.


ரூ.98 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

மற்ற திட்டங்களில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்சமயம் 1.5 ஜிபி டேட்டாவும், தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கிய திட்டங்களில் தற்சமயம் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449 திட்டங்களில் முறையே 42 ஜிபி, 105 ஜிபி, 126 ஜிபி மற்றும் 136 ஜிபி டேட்டா 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இவற்றில் முறையே தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இதேபோன்று ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 56 ஜிபி, 140 ஜிபி, 168 ஜிபி மற்றும் 182 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.

இவற்றில் முறையே 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியும் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் அறிவித்திருக்கும் புதிய திட்டங்களை ஜனவரி 26-ம் தேதி முதல் பயன்படுத்த முடியும்.

இத்துடன் ஜியோ ஏற்கனவே அறிவித்த 100% கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகை ரூ.398 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்வோருக்கு வழங்கப்படுகிறது. – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05