பச்சை மாங்காய் ஜூஸ் குடிச்சால் இவ்வளவு நல்லதா.?

பழுக்காத மாம்பழத்தை கொண்டு உருவாக்கப்படும் ஜூஸில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதனை மாங்காய் ஜூஸ் என்று கூறுவார்கள். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து தற்போது பார்ப்போம்.

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, அனைவரும் ஜூஸ் நீராகாரங்கள் ஆகியவற்றை அதிகமாக உண்ண தொடங்குவார்கள். அதுவே நாம் உட்கொள்ளும் ஜூஸ் அதிக சத்துக்கள் நிறைந்ததாக இருந்தால் இன்னும் சிறப்பாக தானே இருக்கும். அப்படி மாங்காய் ஜூஸ் என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை இதில் பார்ப்போம்,

மாம்பழத்தில் விட்டமின் சி, பீட்டா , கரோட்டின், பொட்டாசியம், இரும்பு சத்து என அனைத்தும் உள்ளது. இந்த ஜூஸை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை, இரத்த கோளாறு, சருமம் மேம்படுத்துதல், ஆரோக்கியம் ஆகிய பல நன்மைகள் உள்ளது. அதே பழுக்காத பச்சை மாம்பழ ஜூஸ் மிகவும் சத்தான ஆகாரம். வெளிர் பச்சை அல்லது மஞ்சள் கலரில் காணப்படும் இந்த மாங்காயை சிறிதாக நறுக்கி, அரைத்து அவற்றில் உப்பு போட்டு குடித்து வந்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் வந்து சேருகின்றது.

இதில் விட்டமின் ஏ, பி1 மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் காரணமாக நமது ஜீரண சக்தி அதிகரிக்கிறது. நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட இந்த ஜூஸ் பெருமளவு உதவுகிறது. பக்கவாதம் உள்ளவர்கள் இந்த ஜூஸை சாப்பிடும்பொழுது உடலுக்கு எலக்ட்ரோ லைட்டுகளை நமக்கு தருகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் தருகின்றது. தற்போது பாக்டீரியாக்கள் பரவி வரும் நேரத்தில் இந்து ஜூலை நாம் எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உடல் கோளாறுகளை மேம்படுத்துகிறது. குடலில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் இது உதவுகிறது. இதனுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடிக்கும் போது வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை ஆகியவை இயற்கையாக சரியாகிவிடும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இதில் அதிக அளவில் உள்ளது. இந்த ஜூஸ் நாம் எடுத்து வந்தால் வயிற்று புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்று நோய் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம். கண்களுக்கு மிகவும் நல்லது.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!