சர்க்கரை நோயாளிகளுக்கு பிஸ்தா எப்படி உதவுகிறது..?

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

அதன்படி பிஸ்தாவில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமானது. இது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ தோல் முதிர்ச்சி அடைவதை தடுத்து, பொலிவை காக்கிறது. மேலும் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவு. இது ரத்த நாளங்களை பாதுகாக்கிறது. இதயநோய் அபாயத்தை குறைக்கிறது.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!