தினமும் கம்பு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்..!

கம்பில் உள்ள சத்துக்களை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.

நிறைய நார்ச்சத்து நிறைந்துள்ள ஒரு பொருள். இது செரிமானத்திற்கு உதவும் பித்த அமிலங்களின் சுரப்பையும் குறைக்கும். பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கம்பு மிகவும் சக்தி வாய்ந்த பொருள். இந்த கம்பை மற்ற உணவு உடன் ஒப்பிடும் போது மெதுவாக செரிப்பதால் குளுக்கோஸை விரிவான விதத்தில் வெளியிடும். ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க இது மிகவும் உகந்தது. உடல் எடையை குறைப்பதற்கு நல்ல மருந்தாக உதவுகிறது. இதனை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களில் இருந்து நம்மை காக்கின்றது. பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் செல்கள் உருவாகாமல் இருக்க இது உதவுகிறது .தாய் பால் சுரப்பிற்கு குழந்தைகள் பெற்ற பெண்கள் இதை குடித்து வந்தால் நல்லது. தினமும் கம்பு கூழ், களி போன்றவற்றை சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!