பக்தனை கூடவே இருந்து காப்பாற்றுவதே பாபாவின் வாக்குறுதி..!

சாயியின் பிற பாவங்களால் ஈர்க்கப்பட்டு சிற்சில சமயங்களிலாவது அவரது பாதங்களிலேயே மனதை லயிக்கச் செய்தால் போதும் யமன் கனவில் கூட அவர்களை நெருங்கமாட்டான் ஏனெனில் அவர்களுடைய கர்மவினைகள் தீர்க்கப்பட்டு விட்டன. கடந்த கால பாவச் செயல்களுக்காக யமன் அளிக்கும் தண்டனைகளின் கொடுமையும் தமது பக்தர்களை அச்சுறுத்தாது என்கிறார் பாபா. என் பக்தன் ஷீரடியிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் இருப்பினும், அவனுடைய உடலை விட்டுப் பிரிந்த கணமே அவனது ஆன்மா எம்மை வந்தடையும்.

ஒரு ஆத்மாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டால், அதை ஒன்றன் பின் ஒன்றாகப் பல பிறவிகளிலும் தாம் பின் தொடர்வதாகவும், அவசியத்திற்கேற்ப அடிக்கடி தாமும் பிறவி எடுப்பதாகவும், அந்த ஆன்மா இறுதி இலக்கை, அதாவது பகவத்பாத மூலத்தை, அடையும் வரை கவனிப்பதாகவும் பாபா கூறுகிறார். பாபாவை அன்புடனும், இடைவிடாதும் நினைத்த வண்ணம் இருப்பதே உன்னதமான வழிபாடு எனலாம்.

பாபா தனது பக்தர்களிடம் தனக்கான பூஜை முறைகளையோ, விரதம் இருக்கவோ கூறியதில்லை. நாம் எல்லா நேரங்களிலும், எல்லா சூழல்களிலும் அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே பாபாவின் விருப்பம். அப்படி தன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் பக்தனை கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரது வாக்குறுதி. இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன் என்கிறார்.- Source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!