பக்கவாதம் வர என்ன காரணம்…? இதோ ஆயுர்வேத சிகிச்சைகள்!

நாமாத்ம ஜவாத வியாதி என்று பக்கவாதத்தை ஆயுர்வேதம் வகைப்படுத்தும். ஆகவே வாதத்தை இயல்பு நிலையிலிருந்து மாற்றும் உணவு முறை, செயல் முறை ஆகியன பக்கவாதத்துக்கு காரணமாகின்றன.


நாமாத்ம ஜவாத வியாதி என்று பக்கவாதத்தை ஆயுர்வேதம் வகைப்படுத்தும். ஆகவே வாதத்தை இயல்பு நிலையிலிருந்து மாற்றும் உணவு முறை, செயல் முறை ஆகியன பக்கவாதத்துக்கு காரணமாகின்றன.

அத்துடன் மனநிலை, விபத்து ஆகியனவும் காரணமாகலாம். இவை தவிர சில, பல சூழ்நிலைகளாலும் பக்கவாதம் வரலாம். வாதம் நிலை மாறுவது இரண்டு காரணங்களால் வரலாம்.

1.அதன் பாதை தடைபடுவது. 2, எலும்பு, தசை, ரத்தம் போன்ற எல்லா திசுக்களும் நலிந்து போவது ஆகியன அவை.

பாதை தடைபடுவது:

உணவு உண்ணாமை, இலகுவான, வறட்சியான உணவுகள் ஆகியன ரத்த திசுக்களிலுள்ள ப்ளாஸ்மாவை குறைத்து விடும். இதனால் திசுக்களின் மாற்றம் நிகழ்ந்து, பாதைகள் அடைபட்டு, வாதத்தின் இயல்புநிலை பாதிக்கப்படுகிறது.

திசுக்கள் நலிந்து போவது:

இச்சைகளை அடக்குவது, இருமல் தும்மல், ஏப்பம், ஆகியனவற்றில் தொடங்கி எல்லாவிதமான இச்சைகளை அடக்குவதாலும், செரிக்காத கழிவுகள் வெளியேறாத நிலை (ஆமம்) ஆகியன காரணமாக தடை ஏற்படலாம்.

பக்கவாதத்தில் பித்தம், கபம், தோஷத்துடன் சேர்ந்திருந்தாலும் பாத தோஷமே முக்கிய பங்கு வகிக்கிறது. பக்கவாதம் வரும் போது, வாதத்தின் உலர்ந்த, குளிர்ந்த, இலகுவான, சூட்சமமான குணங்கள் அதிகமாகி, தசைகள் சுருங்குதல், பாதிக்கப்பட்ட இடத்தில் உடல் வெப்பம் குறைதல் ஆகியன நேரிடும்.
நேர்மாறாக வாதத்தின் முக்கிய குணமான இயக்கம் குறையும், அதனால் உடலில் அனிச்சை செயல்கள் நடைபெறாமல் பாதிக்கப்படுகிறது.

வருமுன் காக்க

பரம்பரையாக இந்நோய் வந்த குடும்பத்தில் உள்ளவர்கள், அதிக மன சோர்வு, மன அழுத்தம் தரும் வேலை, தொழில் செய்பவர்கள் போன்றோர் கீழ்க்கண்டவற்றை கடை பிடித்தால் இந்நோயிலிருக்கு தப்பிக்கலாம்.

  • உணவில் உளுந்து, கொள்ளு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கி, பூசணி, பச்சைப்பயறு ஆகியவற்றை தவறாமல் உண்பது.
  • மாம்பழம், திராட்சை, மாதுளை ஆகிய பழங்களை அடிக்கடி எடுப்பது.
  • அதிக நார்ச்சத்துள்ள, குறைவான கொழுப்பு சத்துடைய உணவுகளை உண்ணல்
  • ரசாயனம் எனப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ளல் * உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல்
  • உடல் எடை, கொழுப்பின் அளவு ஆகியவற்றை குறைத்தல் * தகுந்த உடற்பயிற்சி * அதிக எண்ணெய், அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகளை தவிர்ப்பது, அதிக காரம், அதிகத்துவர்ப்பு உணவுகளை தவிர்ப்பது. * பார்லி, பட்டாணி, கடலை பருப்பு ஆகியவற்றை தவிர்ப்பது. * அதிக உடற்பயிற்சி, அடிக்கடி உண்ணாநோன்பு ஆகியவற்றை தவிர்த்தல் * இரவில் தூக்கம் கெடாமல் இருப்பது * இயற்கையாக வரும் இச்சைகளை அடக்குவது. * புகை, மது ஆகியவற்றை தவிர்ப்பது * மருத்துவ ஆலோசனை பெறாமலேயே, ஏற்கனவே எடுத்து கொண்டிருக்கும் மருந்துகளை நிறுத்துவது என்பன நோய் வருவதை தடுப்பன.

சிகிச்சை முறைகள்

நோய் வருவதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை தடுப்பது, விபத்தை தடுப்பது.

உடலை, உள் உறுப்புகளை சுத்தம் செய்வது ஆகியன மேற்கொள்ளப்படும்.

  1. எண்ணெய் தேய்ப்பது (மகாநாராயண தைலம், சஹஸ்ராதி தைலம், தன்வந்த்ரம் தைலம், கார்ப்பாச அஸ்தி யாதி தைலம், ஷீரபலா தைலம், பலா தைலம் மஹாம்ஈஷ தைலம், பிரபஞ்சன தைலம்.
  2. ஸ்வேதனம் (வியர்வை உண்டாக்கல்)
    நவரா அரிசி, பலா மூலம், அஸ்வகந்த மூலம், பால் ஆகியன பயன்படுத்தப்படும்.
  3. வயிறு சுத்தப்படுத்துதல் (விரையேச்சனம்)
    வாய் வழியாக மருந்து தருதல்
    மருந்தூட்டப்பட்ட விளக்கு எண்ணை அல்லது அவிபத்திகார சூரணம் அல்லது திரிவ்ரத லேகியம் ஆகியவற்றை உபயோகித்தல்.
  4. ஆசன வழியே எனிமா கொடுத்தல் (வஸ்தி)
    மாத்திரை வஸ்தி (நாராயண தைலம் பயன்படுத்தி 7-14 நாட்கள் கஷாய வஸ்தி 15 நாட்கள்.
    ஓரண்ட மூலவதம் – 480 மி, தைலா – 240 மி, தேன் – 240 மி, கல்கா – 30 கிராம், உப்பு – 15 கிராம்.
    ஷீரவஸ்தி 350 – 500மி, 7-14 நாட்கள்.
  5. மூக்கின் வழி நஸ்யம்
    பழைய நெய், நாராயண தைலம், ஹீரபலா தைலம் 6-8 சொட்டுகள் இரு மூக்கிலும்

ஸ்ரோவஸ்தி
தலை மீது தொப்பி போன்று அமைத்து அதில் இருந்து மருந்தூட்டப்பட்ட எண்ணை சீராக ஒழுகும் சிகிச்சை (7 நாட்கள் தினமும் 45 நிமிடம்)
நாராயண தைலம், ஹீரபலா தைலம், சந்தனபலா லாஷிரி தைலம்.

ஷிரோதாரா
தலை மீது மருந்தூட்டப்பட்ட தைலம் ஒழுகு வைத்தல் (21 நாட்கள் – தினமும் 45 நிமிடம்)
நாராயண தைலம், சந்தன பலா, ஷீதாதி, தைலம், ஷீபலா தைலம்
மருந்துகள் (மருத்துவரின் ஆலோசனைப்படி)
மஹாராசனாதி கஷாயம், காந்தர்வ ஹஸ்நாதி கஷாயம், மானஸ மித்ர வடகம், அஸ்வ கந்தாரிஷ்டம், ஷீரபலா தைலம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!