உருளைக்கிழங்கு தோலில் மறைந்துள்ள ரகசியங்கள் குறித்து தெரியுமா?

அனைவருக்கும் பிடித்த உணவாக உருளைக்கிழங்கு உள்ளது.

100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். மேலும் 100 கிராம் கிழங்கில் 22.6% கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

எனவே உடலுக்கு உடனே சக்தி கிடைத்து விடுகிறது.

உருளைக்கிழங்கை போலவே அதன் தோலிலும் நம்பமுடியாத வகையில் ஏராளமான நன்மைகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

உருளைக் கிழங்கு தோலில் இருக்கும் அபரிமிதமான பொட்டாஷியம் சத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.

தோலில் உள்ள நார்ச்சத்து, ரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

உருளைக் கிழங்கு தோல், ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.

உருளைக் கிழங்கு தோலில் விட்டமின், ‘பி6’ அதிகம் உள்ளது. அது மூளையில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களான, செரோடோனின், டோபோமைன் உருவாக உதவும். இந்த ஹார்மோன், நம்முடைய நடத்தை, துாக்கம், பசி உணர்வு, செரிமானம், நினைவாற்றல் என்று பலவற்றையும் கட்டுப்படுத்தக் கூடியது.

செரோடோனின் சுரப்பு குறைந்தால், மன அழுத்தம் ஏற்படும்.

உருளைக் கிழங்கு தோலில் விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளதோடு ஜிங்க் போன்ற நுண்ணுாட்டச்சத்துக்களும் உள்ளன.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!