அந்தரங்க பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தேள் கொடுக்கு மூலிகை.!

தேள் கொடுக்கு என்கிற இந்த மூலிகை மிக எளிதாக தெரு ஓரங்களிலே நம்மால் காண முடியும். இது போன்று தெரு ஓரங்களில் கிடைக்கும் மூலிகைக்கு சக்தி அதிகம் என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகையை நம்மால் வீட்டிலே வளர்த்து கொள்ள இயலும்.

ஆண்களுக்கான அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்கவும் இது மிக சிறந்த மூலிகை என சித்தர்களின் குறிப்புகள் கூறுகின்றன.

சிறுநீரக பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை தர சிறந்த மருந்தாக தேள் கொடுக்கு உதவுகிறது. சிறுநீரக கற்களினால் உண்டாகும் பிரச்சினைக்கும் இது தீர்வை தருகிறது.

பாம்பு, தேள், பூரான் போன்ற விஷக்கடியை முறிக்க இந்த மூலிகை உதவுகிறது. இதற்கு பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. மாறாக தேள் கொடுக்கு இலையை அலசி, அரைத்து கொண்டு விஷக்கடி இருக்கின்ற இடத்தில் தடவி வந்தால் தீர்வு கிடைக்கும்.

அந்தரங்க உறுப்பில் உண்டாக கூடிய சில பிரச்சினைகளை நம்மால் வெளியில் கூட சொல்ல முடியாது. குறிப்பாக அந்தரங்க உறுப்பில் அரிப்பு, தொற்றுகள், புண்கள், சிராய்வு ஏற்பட்டதன் மூலமாக உண்டாக்கிய காயங்கள் போன்றவற்றிற்கு தீர்வை தர தேள் கொடுக்கு உதவுகிறது.

பொதுவாகவே மூலிகைகளை ஒரு சிலர் எடுத்து கொள்ள கூடாது என்கிற வரையறை இருக்க தான் செய்யும். அதே போல தான், தேள் கொடுக்கு மூலிகையை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள கூடாது. இவை கருக்கலைப்பை உண்டாகும் அபாயம் கொண்டவையாம். மேலும், இதனை மிக குறைந்த அளவே எடுத்து கொள்ள வேண்டும். இதன் அளவு அதிகரித்தால் விஷ தன்மை பெற்று விடும்.- source: boldsky * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!