வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு… வாரம் ஒரு முறை தவறாமல் சாப்பிடுங்க!

வாழைத்தண்டில் உள்ள அற்புத குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வாழைத்தண்டு, கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்டது. இதில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் ஆயுர்வேத புத்தகத்திலும், ஓலைச்சுவடிகளிலும் இதன் மருத்துவப் பலன்களை குறித்து எழுதியுள்ளனர். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை குறைக்கும். வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். சிறுநீரக எரிச்சலை நீக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது.

நமது உடலில் நோய்கள் தோன்றக்கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். நாம் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வதாலும், தேவையான உழைப்பு இல்லாததாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது. வாழைத்தண்டு போன்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் போது உடல் ஸ்லிம்மாக மாறும். வாழைத்தண்டில் உள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப்படியாக சதையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கும்.

இதில் உள்ள வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!