சீக்கிரமே உணவு செரிமானம் அடைய கண்டிப்பாக இந்த 3 வழிகளை பின்பற்றுங்க..!

நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆக கண்டிப்பாக 3 வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.


நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆக கண்டிப்பாக 3 வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று வழிகளும் முக்கியமானவை. அவை பசி, எச்சில் மற்றும் உணவில் கவனம் போன்றவைதான்.

பசிதான் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தயார் செய்யும் அம்சம். இந்த பசிதான் நாம் உண்ணும் உணவை நல்லபடியாக செரித்து ரத்தத்தில் கலக்கச்செய்ய உதவுகிறது. பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது. சில சமயம் அதுவே விஷமாகவும் மாறுகிறது. நல்ல ஜீரணத்திற்கான முதல் வழி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது.

இரண்டாவது வழி எச்சில். நாம் சாப்பிடும் உணவில் எச்சில் சேரவேண்டும். எச்சில் கலக்காத உணவு கெட்ட ரத்தம் போன்றதாகிறது. எச்சிலில் நிறைய நொதிகள் உள்ளன. உணவில் உள்ள மூலக் கூறுகளை பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட உணவை மட்டுமே வயிற்றால் செரிக்க வைக்க முடியும். எனவே உணவை மெல்லும் போது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்போதுதான் உமிழ்நீர் நன்றாக உணவில் கலக்கும். வாய்க்குள் நுழைந்த உணவை விழுங்கும் வரை உதட்டை பிரிக்காமல் மென்று சாப்பிடுவதே ஜீரணத்திற்கு நல்லது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!