தினமும் ஒரு ஸ்பூன் உணவில் சேர்த்துக்கோங்க.. எந்த நோயுமே வராது.!

உங்களின் பலவித பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணும் நெய்யின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஆயுர்வேத மருத்துவத்தில் மிகச்சிறந்த நெய். பலவகையான மருத்துவத்திற்கு நெய் தான் முதன்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் வீட்டு வைத்தியங்கள் உக்கும் நெய் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள். செரிமான ஆற்றலை அதிகரிக்க இரவு தூங்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் இரண்டு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் சரியாகும். சளி பிடித்தாலே மூக்கடைப்பு ஏற்படும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது.

இதனை சரிசெய்ய வெதுவெதுப்பான தூய நெய்யை காலை எழுந்ததும் மூக்கில் ஒரு சொட்டுவிட, அது தொண்டைக்கு சென்று தொற்றைக் குறைத்து இதமான உணர்வை தரும். நெய்யில் இருக்கும் அமினோ ஆசிட் கொழுப்பை குறைக்க உதவுகிறது. அதில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் கொழுப்பை கரைக்க உதவும். அதனால் தினமும் உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. சருமம் பொலிவிழந்து காணப்பட்டால் அல்லது காயங்கள், தழும்புகள் இருந்தால் நெய் தினமும் தடவி வர சருமத்தில் மாற்றத்தை உணரலாம்.

இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. தலைமுடி வேர்கள் உறுதியாக இருக்கவும் பொடுகு தொல்லை நீங்கவும் நெய் பயன்படுத்தலாம். இரண்டு ஸ்பூன் நெய் உடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து அதை தலையின் வேர்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து விடுங்கள். தலையில் உள்ள முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சினைகளில் நீங்கும். உதடு இயற்கையாக பிங்க் நிறத்தை இழந்து கருமையாக இருந்தால் அல்லது வெடிப்புகளால் ரத்தக்கசிவு உண்டானால் தினமும் தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நெய்யை தடவி மசாஜ் செய்யுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!