ஆண்மை குறைபாட்டை சரி செய்ய இது ஒன்று போதும்..!!

அம்மன் பச்சரிசியின் நன்மைகள் குறித்து இதில் பார்ப்போம்.

அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் கொடியை நறுக்கினால் பால் கசியும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்மன் பச்சரிசி இலையை சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு நெய் விட்டு சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

குழந்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். இதன் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் கிடைக்கும்.


அம்மன் பச்சரிசி இலையுடன் சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் வதக்கி துவையலாக சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். உடல் சூடு தணியும்.

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டுவிட்டால் வீக்கம் குறையும்.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக உள்ள நேரத்தில் இதன் இலையை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்துப் பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும். ஆண்மை குறைபாடு நீங்கும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!