முருங்கை கீரையில் மொறுமொறுப்பான மெது வடை செய்து அசத்துங்க..!!

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – கால் கப்

உளுந்து – அரை கப்
ஆய்ந்த முருங்கை இலை – 1 கைப்பிடி
எள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
பெரிய வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை

உளுந்து, அரிசியை ஊற வைத்து, ஊறியதும் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைத்த மாவில் முருங்கை இலை, உப்பு, எள், ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி, போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான முருங்கைக்கீரை வடை ரெடி.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!