“இந்த உணவுகளை எல்லாம் தயவு செஞ்சு சாப்பிடாதீங்க”ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

மாறி வரும் உணவு கலாச்சாரம் நம் ஆயுள் நாட்களை குறைத்து கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது உள்ள குழந்தைகளுக்கு நம் பண்டைய உணவுகளை விட பீஸ்ஸா, பர்க்கர் தான் அதிகம் பிடிக்கிறது. இதனால் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகள் மறைப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் பீஸ்ஸா, பர்கர்கள், சமோசா, ப்ரைட் ரைஸ் போன்ற அதிக கொழுப்புள்ள பொருட்களை சாப்பிட விரும்புகிறார்கள், ஆனால் இதுஎவ்வளவு ஆபத்தானது என்பதை பலரும் உணருவதில்லை. அவர்கள் அதிகம் எந்தவகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டு உணவை விட துரித உணவை அதிகம் சாப்பிட விரும்பும் மக்கள் மன அழுத்தத்தால் விரைவாக பாதிக்கப்படுவார்கள், ஏனெனில் அதிக துரித உணவை சாப்பிடுவதால் நம் உடலின் ஹார்மோன் சமநிலை மோசமடைகிறது, இதன் காரணமாக நமது நிரந்தர மன அழுத்தம் பாதிக்கப்படுகிறது.
பீஸ்ஸா, பர்கர், சான்ட்விச் போன்றவை நம் உடலில் அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆராய்ச்சியின் படி, துரித உணவை உட்கொள்வது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. சமீபத்தில் கூட அதிக அளவில் ப்ரைட் ரைஸ் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மரணமடைந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் விரும்புகிறார்கள் என நாமே இந்த அபாயகரமான உணவுகளை வாங்கி கொடுப்பதை தவிர்ப்போம். ஆரோக்கியமான உணவு பழக்கங்களை நாமும் கற்று, அவர்களுக்கும் கற்று கொடுப்போம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!