பாபா விநோதங்களின் பெட்டகமாக வாழ்ந்தார்… சாயியின் லீலைகள் கற்பனைக்கெட்டாதவை!


குழந்தைகள் வளந்துவிட்ட பிறகும் அவர்களுக்குச் செல்லம் கொடுக்கும் போதோ, கொஞ்சும் போதோ, அவர்களுடைய புத்தி வளர்ச்சியை அறிந்து கொண்டே செயல்பட வேண்டும். இவ்வறிவுரை ஞான போதனைக்கும் பொருந்தும்.

புத்தி எவ்வளவு கூர்மையாக் இருக்கிறதோ அவ்வளவு சீக்கிரமாக கிரஹிக்கும் சக்தியும் செயல்படும். ஒரே கணத்தில் உபதேசம் என்னவென்பது புரிந்துவிடும். மந்த புதியாக இருந்தால் நிலையே வேறு; உபதேசம் செய்யப் பிரயாசை (உழைப்பு) அதிகமாகத் தேவைப்படும். சமர்த்த சாயி ஒரு ஞானநிதி. பக்தனுடைய மன நிலைமையை எடைபோட்ட பின், பாத்திரம் சுத்தமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு பாத்திரத்தின் கொள்ளளவிற்கு ஏற்றவாறு ஞான செல்வதை அளிக்கிறார்.

அவருடைய அந்தர்ஞானம் பூரணமானது; எல்லாரையும் பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரியும். ஒவ்வொரு பக்தருக்கும் என்ன தகுதி இருக்கிறது என்றறிந்து அதற்கேற்ற சாதனை முறையை அவருக்கு வழங்குவார். ஒவ்வொருவருடைய ஆன்மீக அதிகாரத்தின் பிரகாரம் தகுதியுள்ளவரா, தகுதியற்றவரா, என்றறிந்த பின்னரே பக்தரின் பாரத்தைத் தம்மேல் ஏற்றுக் கொள்வார்.


அதுபோலவே, ஆண்டுகளில் முதியவர்கள் என நம்மை நாம் கருதினாலும், சாயி என்னும் சித்த புருஷரின் முன்பு நாம் அனைவரும் குழந்தைகளே. இதனால்தான் நாம் நகைச்சுவையிலும் நையாண்டியிலும் சதா ஆர்வம் காட்டுகிறோம். பாபா விநோதங்களின் பெட்டகமாக வாழ்ந்தார்.

ஒவ்வொரு பக்தருக்கும் எது மிக விருப்பமோ அதை யதேஷ்டமாக (விருப்பம் நிறையுமாறு) கொடுத்தார். புத்தி கூர்மையானவர்களும் சரி, மந்த புத்திக்காரர்களும் சரி, இந்த அத்தியாயத்தைப் படிப்பதால் பரமானந்தம் அடைவார்கள். எல்லாருமே மேலும் இக்காதையை கேட்கவேண்டுமென்று விரும்புவர்.

தியானம் செய்யின் சந்தோஷமடைந்து திருப்தியுருவர். திரும்பத் திரும்பப் படித்தால் ஆன்மீகப் பாதை புலப்படும்; எந்நேரமும் மனத்திரையில் ஓடவிட்டால் பேரானந்தத்தையும் தங்கு தடையில்லாத மனமகிழ்ச்சியையும் அடைவர். இதுவே ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட பாபாவின் லீலை! மிகச் சிறிய அளவிலும் இந்த அனுபவத்தைப் பெரும் பாக்கியம் எவராவது பெற்றால், மனதாலும் வாக்காலும் செயலாலும் அவர் பாபாவோடு இணைந்து கொள்வார். சாயியின் லீலைகள் கற்பனைக்கெட்டாதவை.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!