கூகுள் வரலாற்றில் முதன் முதலாக சன்மானம் பெற்ற பெண்.. எதற்காக தெரியுமா..?


கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழையை கண்டறிந்த ஆராய்ச்சியாளருக்கு கூகுள் நிறுவனம் 112,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,83,300) வழங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு பாதுகாப்பு விருதுகள் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குவாங் கோங் என்பவர், தான் கண்டறிந்த பிழையை சமர்பித்தார். இவரது பிழையை உறுதி செய்த கூகுள் கோங்-க்கு 1,05,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.66,90,075) சன்மானம் வழங்கியுள்ளது.

கூகுள் வரலாற்றில் இத்தகைய சன்மானம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இத்துடன் குரோம் ரிவார்ட்ஸ் திட்டத்தில் கூடுதலாக 7500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4,78,900) வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு டெவலப்பர் வலைப்பக்கத்தில் இந்த பிழையின் தொழில்நுட்ப விவரங்களை கூகுள் பதிவிட்டிருக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு பிழையை கண்டறிந்து, கூகுளிடம் தெரிவித்தமைக்கு கோங் மற்றும் கியூஹூ 360 டெக்னாலஜி நிறுவனத்தை சேர்ந்த ஆல்பா குழுவினருக்கு கூகுள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 டிசம்பர் மாத பாதுகாப்பு அப்டேட்டில் மட்டும் 42 பிழைகள் சரி செய்யப்பட்டதாக கூகுள் தெரிவித்திருக்கிறது.

ஆண்ட்ராய்டு இயங்குதள பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு ரிவார்ட்ஸ் திட்டத்தில் பிழைகளை கண்டறியும் பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கு கூகுள் சார்பில் சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 2017-இல் கூகுள் பிக்சல் 2, கூகுள் பிக்சல், பிக்சல் XL மற்றும் கூகுள் பிக்சல் சி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு ரிவார்ட்ஸ் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!