ஆண்களே ஷேவ் செய்தபின் கட்டாயம் இதை செய்யுங்க.. அப்பறம் பாருங்க..!


தினமும் ஷேவ் செய்வதென்பதே சிலருக்கு பெரிய வேலையாக இருக்கிறது. ஆனால் அதை வேலையாகப் பார்க்காமல் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும் விஷயமாகப் பார்த்தால், ஷேவ் செய்வதை ரசித்து செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

ஷேவ் செய்வதில் மூன்று வகையான படிநிலைகள் உள்ளன.
ஷேவ் செய்வதற்கு முன்
ஷேவ் செய்யும்போது
ஷேவ் செய்து முடித்தவுடன்
இப்படி மூன்று நிலைகளில் சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஷேவ் செய்து முடித்தபின் செய்ய வேண்டியவை மிக முக்கியம்.

ஷேவ் செய்வதற்கு நல்ல ஷேவிங் க்ரீம் அல்லது ஃபோம் பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு க்ரீமை ஷேவ் செய்தபின், மென்மையாக துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்துவிட்டு, முகத்தை நன்கு கழுவ வேண்டும்.


சிலர் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவுவார்கள். ஆனால் வெதுவெதுப்பான நீரைவிடவும், குளிர்ந்த நீர் கொண்டு கழுவுவதே சிறந்தது. குறிர்ந்த நீரானது தளர்ந்த சருமத்தை இறுக்கமாக மாற்றும்.

ஷேவ் செய்து முடித்த பின், சருமம் சற்று கடினமானதாகத் தோன்றும். அதை சரிசெய்ய ஸ்மூத்தான கிளன்சிங் க்ரீம்கள் உண்டு. அதைப் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.

தாடியை ட்ரிம் செய்தாலோ அல்லது அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் சிறுசிறு முடிகளை கத்தரியால் வெட்டிவிட வேண்டும்.

அதன்பின் எரிச்சல் இல்லாமல் முகம் குளிர்ச்சியாக இருக்க நல்ல தரமான டோனரை அப்ளை செய்ய வேண்டும்.

அதன்பின், சருமுத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற ஆஃடர் ஷேவிங் லோஷன் அல்லது நல்ல மாய்ச்சரைஸர் பயன்படுத்தவும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!