அமேசானின் அதிர்ஷ்ட அறிவிப்பு… 1,00,000 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!


உலகம் முழுவதுமே பொருளாதாரத்தை சின்னாப்பின்னமாக்கி சூறாவளியாய் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது கொரோனா. இந்த பொருளாதார சீர்குலைவு இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிக்குமோ.. அல்லது வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்குமோ தெரியவில்லை என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இந்நிலையில், அச்சுத்துறை, ஆட்டோமொபைல் என்று சகலத் துறைகளிலும் வேலையிழப்பும், சம்பளக்குறைப்பும் சகஜமாக காணப்படுகிறது. ஐடி துறை எல்லாம் அதள பாதாளத்திற்குச் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சுமார் ஒருலட்சம் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்த இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவை தவிர, அமெரிக்கா, கனடா நாடுகளில் மட்டும் புதிதாக 100 குடோன்களைத் திறக்க இருப்பதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!