எல்ஜி நிறுவனம் வெளியிட்ட அதிரடி தகவல்..!


எல்ஜி நிறுவனத்தின் மொபைல் பிரிவில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐகான் எனும் புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்களை எல்ஜி நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஐகான் பெயரில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் எல்ஜி பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் எல்ஜி ஐகான் (Icon), எல்ஜி ஏஐகான் (Aicon), மற்றும் எல்ஜி ஏகான் (Aiconn) உள்ளிட்ட பெயர்களில் சாதனங்களை வெளியிட காப்புரிமை கோரியிருக்கிறது. பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் எல்ஜியின் புதிய காப்புரிமை குறித்த தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தார்.

மேலும் எல்ஜி ஐகான் சீரிஸ் சாதனங்கள் எல்ஜியின் ஜி சீரிஸ் ரீபிரான்டு செய்யுமா அல்லது ஐகான் சீரிஸ் பெயரில் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படுமா என்பது கேள்விகுறியாக உள்ளது. சமீபத்தில் தனது ஸ்மார்ட்போன்களை வழக்கமான இடைவெளியில் ஸ்மார்ட்போன்களை வெளியிடாது என எல்ஜி தெரிவித்திருந்தது.

எல்ஜி வழக்கப்படி அந்நிறுவனத்தின் ஜி-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என்றும் இரண்டாவது பாதியில் வி-சீரிஸ் ஸ்மார்ட்போனினை வெளியிடும். ஸ்மார்ட்போன் வெளியீடுகளை மாற்றுவதோடு மட்டுமின்றி பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக எல்ஜி தெரிவித்திருக்கிறது.

முன்னதாக எல்ஜியின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற நிறுவனங்கள் வெளியிடுவதற்காக தனது ஸ்மார்ட்போன்களை வெளியிடாமல் அதிகளவு ஸ்மார்ட்போன்களை குறைந்த இடைவெளியில் வெளியிட இருக்கிறது.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!