ஒரே சலவையில் அக்குள் காலர் கறைகளை போக்கிட இதோ சூப்பரான வழி இதோ..!


அதிக வியர்வை தொல்லையால் அக்குள் மற்றும் காலர் பகுதிகளில் நீக்க முடியாத அழுக்கு சேர்ந்து விடும். அந்த கறைகளை ஒரே சலவையில் போக்க சூப்பரான ட்ரிக் இதோ…

ஒரே சலவையில் அக்குள், காலர் கறைகளை போக்கிடலாம்.

தேவையான பொருட்கள்

இதமான நீர் – தேவையான அளவு

ஒயிட் வினிகர் – 1/2 க்ளாஸ்

அலசும் முறை

கறைபடிந்த சட்டையை இதமான சூட்டில் உள்ள நீரில் 1/2 கிளாஸ் ஒயிட் வினிகரைச் சேர்த்து, ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

முக்கியமாக அக்குள் மற்றும் காலர் பகுதிகளில் படிந்திருக்கும் வியர்வை, அழுக்கை போக்க வாஷிங் மெஷினில் துவைக்கும் போது, டிடர்ஜென்ட் உடன் அரை கிளாஸ் வினிகரும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு மெஷினில் துவைக்கும் போது, துணிகளுக்கு மென்மையான தன்மை அளிப்பதுடன், மெஷினில் டிடர்ஜெண்ட் தங்காமல் தடுக்கிறது.

மேலும் ஒயிட் வினிகர் பயன்படுத்துவதால், அது சட்டையில் உள்ள கறையை போக்கி உடைகளுக்கு மிருதுவான தன்மை அளிக்கிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!