நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றும் சீரடி சாய் பாபா..!


இறைவனிடம் நாம் அன்பு வைக்கும் போது, எள் முனை அளவு கூட சந்தேகம் இல்லாமல் வைக்க வேண்டும். அப்போது தான் அந்த பக்தி முழுமைப் பெறும். நம்முடைய கோரிக்கைகள் நியாயமாக இருப்பின், அதை தெய்வம் நிச்சயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

பாபாவின் அன்புக்கு பாத்திரமான தாமோதரை எல்லாரும் செல்லமாக தாமு அன்னா என்றே அழைப்பார்கள். பாபாவும் அவ்வாறே அழைத்தார். ஒரு தடவை கோவாவைச் சேர்ந்த ராலே என்ற பணக்காரர் ஒரு பெரிய பார்சலில்300 மாம்பழங்களை சீரடி பாபாவுக்கு அனுப்பி வைத்தார். அதில் 8 நல்ல மாம்பழங்களை பாபா எடுத்து”இந்த 8 மாம்பழங்களையும் நான் தாமு அன்னாவுக்காக எடுத்து வைத்திருக்கிறேன். அவை இங்கேயே இருக்கட்டும்” என்றார்.

மசூதியில் இருந்த மற்ற பக்தர்களுக்கு, பாபா ஏன் 8 மாம்பழங்களை தாமோதருக்காக எடுத்து வைக்கிறார் என்ற உண்மை முதலில் தெரியவில்லை. தாமோதருக்கு மொத்தம் 3 மனைவிகள். அவர்களில் ஒருவருக்குக் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் தாமோதருக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.ஏராளமான ஜோதிடர்களிடம் அவர் தன் ஜாதகத்தை காட்டியும், ஜோதிடர்கள் அனைவரும் தாமோதரனின் ஜாதகத்தில் முக்கிய இடத்தில் பாவக்கிரகம் ஒன்று இருப்பதால் இந்த பிறவியில் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டனர்.

இதனால் அவர் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தாலும், ஒரு நம்பிக்கையுடன் பாபா தனக்கு ஒரு குழந்தையை அருள மாட்டாரா என்ற ஏக்கத்துடன் சீரடிக்கு வந்து கொண்டே இருந்தார். தாமோதரின் உள்ளக் குமுறலை பாபா நன்கு அறிந்திருந்தார். தாமோதரனின் மனக்குறையை போக்க அவர் தக்க நேரத்துக்காக காத்திருந்தார். பாபா… சொன்னது போல சிறிது நேரத்தில் தாமோதர் மசூதிக்குள் ஏறி வந்தார். பாபா கணித்தது போலவே அவர் வந்து விட்டாரே என்று மற்ற எல்லா பக்தர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

தாமோதர் பாபாவின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பாபா, ”இந்தா பிடி 8மாம்பழங்கள்” என்று கொடுத்தார். மகிழ்ச்சியோடு அந்த 8 மாம்பழங்களையும் தாமோதர் பெற்றுக் கொண்டார். அப்போது பாபா, தாமோதரனைப் பார்த்து, இந்த 8 மாம்பழங்கள் உனக்கு குழந்தைப் பாக்கியம் தரும் சக்தி கொண்டவை. எனவே இவற்றை கவனமாக எடுத்துச் செல். இந்த 8 மாம்பழங்களையும் நீ சாப்பிடக் கூடாது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!