வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சீன தூதர்..!


இஸ்ரேலுக்கான சீன தூதர் வடக்கு டெல் ஆவிவ்-ல் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டிற்கான சீன தூதராக இருந்தவர் டு வெய் (வயது 58). கொரோனா பாதிப்புக்கிடையே இவர் கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான சீன தூதராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன் உக்ரைன் நாட்டின் தூதராக பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டு வெய்க்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் இஸ்ரேலில் இல்லை.

இஸ்ரேலுக்கும், சீனாவுக்குமிடையிலான உறவு சிறப்பாகவே உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் சீனா சில உண்மைகளை மறைக்கிறது என்று அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு டு வெய் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்டனம் தெரிவித்திருந்த 2-வது நாளில் டு வெய் உயிரிழந்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!