நீங்கள் வாங்கும் தக்காளி நல்லதா, கெமிக்கல் நிறைந்ததா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?


பல நிபுணர்களும் பச்சையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது என்று கூறுவார்கள். உண்மையிலேயே, அது நிஜம் தான். ஆனால் தற்போது விற்கப்படும் பல காய்கறிகள் மற்றும் பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக (GMO) உள்ளது. இவை உடலுக்கு மிகுந்த தீங்கை விளைவிக்கக்கூடியவை என பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நம்மில் பலருக்கும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி அல்லது இதர மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை எப்படி கண்டறிவது என தெரியாது. ஆனால் இக்கட்டுரையைப் படித்தப் பின் உங்களால் எளிதில் நல்ல தக்காளிக்கும், GMO தக்காளிக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிய முடியும். அதில் ஒன்று GMO தக்காளிகளின் மையப் பகுதி நன்கு கனிந்து, சற்று வித்தியாசமாக இருக்கும்.


GMO உணவுப் பொருட்கள்

GMO உணவுப் பொருட்களால் தீங்கு விளைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது. அதுவும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கூடத்தில் உள்ள விலங்குகளுக்கு நச்சு, ஒவ்வாமை, உடல்நிலை சரியில்லாமல் போவது மற்றும் ஒவ்வொரு உறுப்புக்களையும் பாதித்திருப்பது தெரிய வந்தது.


தடை செய்யப்பட்ட நாடுகள்

பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த உணவுகளை ஆரோக்கியமற்றதாக கருதி, அவற்றை தடைசெய்துள்ளது. உலகில் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் GMO உணவுப் பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

GMO உணவுப் பொருட்களை அறிவது எப்படி?
* கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்ட வளர்க்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் நான்கு இலக்கங்களைக் கொண்ட குறியீட்டுடன் பெரியடப்பட்டிருக்கும்.

* ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் 5 இலக்கங்களுடன், 9 என்ற எண்ணில் ஆரம்பமாகும்.

* GMO பழங்கள் மற்றும் காய்கறிகள் 5 இலக்கங்களுடன், 8 என்ற எண்ணில் ஆரம்பமாகும்.


அமெரிக்கா

அமெரிக்காவில் 80% சதவீதத்திற்கும் அதிகமான பதப்படுத்தப்பட்ட உணவுகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகளாகத் தான் உள்ளது.


ஐரோப்பிய நாடுகள்

பல ஐரோப்பிய நாடுகளில் GMO பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்தி தடைசெய்யப்பட்டுள்ளது. அதோடு, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ் போன்ற நாடுகளிலும் இந்த உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!