இந்த காரணங்களால் தான் உங்க அழகு கெட்டு போகுது என தெரியுமா..?


முகத்தின் அழகு தோற்றம் தான் ஒருவரை பற்றிய முதல் நல் அபிப்பிராயத்தை வரவழைக்கும் முகத்தின் தோற்றத்திற்கும் உடல் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்து கொண்டால் 6 வாரத்தில் ஆழகாக்குகின்றேன் என்று சொல்லும் இரசாயன முக கீரீம்களிலிருந்தும், பவுடர்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற பொருள்களிலிருந்தும் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

சிலருக்கு உடம்பு வெள்ளையாக இருக்கும் முகம் மட்டும் கருத்து கொண்டே போகும். இவர் எத்தனை கிரீம் போட்டு தேய்த்தாலும் கீரீம்தான் தீர்ந்து போகும் ஒழிய முகத்தின் கருப்பு மாறாது.

யார் ஒருவருக்கு முகம் மட்டும் கருத்துக் கொண்டே போகின்றதோ அவருக்கு சிறுநீரகம் சரியாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிறுநீரக பலகீனத்தின் பிரதிபலிப்புதான் முகம் கருத்து போவது. இதுமட்டுல்ல முகத்தில் வீக்கம், தசைகள் சுருங்கல் கழுத்தின் முன் பக்கம் சதை உண்டாகுதல், நாக்கு உலர்ந்து போவது இவையெல்லாம் சிறுநீரகத்தின் சக்தி குறைபட்டால் உருவாவதே.


புருவம் இமைகளில் உள்ள முடி யாருக்கொல்லாம் கொட்டுகின்றதோ அவருக்கு நுரையீரல்களின் இயக்கம் சரியில்லை, அதை சரிசெய்யும் போது இவை சரியாகும். உடம்பில் உள்ள முடி கொட்டுவது (தாடி, மீசை, புருவம், இமை, பிறப்புறுப்புகள்) நுரையீரல் சம்பந்தப்பட்டது, தலையில் உள்ள முடி கொட்டுவது கிட்னி சம்பந்தப்பட்டது.

கண்களில் கீழ் இமை சிலருக்கு சிறு பை போல் தொங்கும் அல்லது துடித்துக் கொண்டே இருக்கும் வயிறு சக்தியின் குறைபாடே இது. உதடு அழகாயிருக்க ஆயிரக்கணக்கில் மேக்கப் உபகரணங்கள், ஆரோக்கிய உடலுக்கு அது தேவையில்லை. உதடு பெருத்து தொங்கினால் உங்களுடைய மண்ணீரலும் வயிறும் தான் காரணம்.


உதடு வறண்டு போனால் அதற்கு பெருங்குடலே காரணம். இந்த உறுப்புகள் சரியாக இயங்கினால் உதடு இயற்கையாகவே அழகாக அமைந்துவிடும். முகம் கருத்து போவது சிறுநீரக பலகீனத்தால் ஏற்படுவது போல் சிலருக்கு முகம் நீல கலராக மாறும் இதற்கு காரணம் கல்லீரலே. அதே போல முகம் வெளுத்தல் போன்று தோன்றினாலும் அதற்கும் காரணம் கல்லீரலே இந்த உறுப்புகளின் இயக்கத்தை சரிசெய்தால் இவைகள் சரியாகிவிடும்.

முகத்தில் கன்னம் மட்டும் உப்பியிருந்தால் சிறுகுடலை கவனிக்க வேண்டும். முகம் முழுவதும் உப்பியிருந்தல் வயிறு பெருங்குடலை சரி செய்ய வேண்டும். கண்களின் சிகப்பு, நீர்வடிதல் போன்றவற்றை சரி செய்ய நாம் சிறுநீர்பையின் சக்தி நிலையை சரிசெய்ய வேண்டும்.

முகத்தின் தோற்றம் இத்தனை உறுப்புகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது இவற்றையெல்லாம சரிசெய்யாமல் மேக்கப் போட்டு சரி செய்ய முற்படுவது நமது உடலில் தேவையில்லாத இரசாயண பொருட்களை உள் அனுப்பி தோல் வியாதிகளை விலைக்கு வாங்குவது போன்றதாகும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!