சூடான நீரை அதிகமாக பருகுபவரா..? சிறுநீரகத்தையே காலி பண்ணிடுமாம்..!


வெந்நீரில் பருகுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன அதுபோலவே சில பக்க விளைவுகளும் உள்ளன.

மனித உடலானது 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனது, இதனால் உடல் நீர்ச்சத்துடன் இருக்க முடிகிறது.

நான் சூடான நீரை பருகும் போது உடலிலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் என்று நினைத்து அதிகமாக பருகுவது தவறாகும்.


சூடான நீரை நாம் அதிக அளவில் பருகும்போது, அது எதிர்மறை விளைவுகளை தான் ஏற்படுத்தும், இவ்வாறு நாம் பருகும் இந்த சூடான நீரானது உடலினுள் சென்று சிறுநீரகத்தின் சுத்திகரிப்பு வேலையை அதிகப்படுத்தும், இதனால் சிறுநீரகம் சேதம் அடையும் வாய்ப்புள்ளது.

ரத்தத்திலுள்ள எலெக்ட்ரோலைட்கள், வெந்நீரினால் அதிக அளவில் நீர்த்துப் போவதால் செல்களில் வீக்கம் ஏற்பட்டு தலைவலி, மூளை அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன.

நமது உடலின் உள் உறுப்புகளிலிருக்கும் வெப்பநிலையை விட, வெந்நீரிலுள்ள வெப்பநிலை மிக அதிகம் என்பதால், அதனை நாம் பருகும்போது உணவு குழாய் மற்றும் செரிமான பாதையும் பாதிப்படையும்.


நாம் தொடர்ந்து அதிக அளவில் வெந்நீரை பருகும்போது மூளையிலுள்ள செல்கள் வீக்கமடையும், அதோடு மட்டுமல்லாமல் சூடான நீரை பருகும்போது உதடுகள் பாதிப்படையலாம்.

எனவே, ஒரேயடியாக வெந்நீர் நிறைய பருகுவதை விட, சிறிதளவு நீரைப் பருகிவிட்டு அதனுடைய வெப்பநிலையை உணர்ந்து, பின்னர் அதிகமாக பருகலாம்.

அது போல் இரவு நேரங்களில் தூங்கச் செல்லும் முன்பு, அதிகமாக தண்ணீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது தூக்கத்தின் தன்மையை மிகவும் பாதிக்கும்.

குளிர்ந்த நீரை விட அதிகமாக வெந்நீரில் தான் தொற்றுகள் கரையும். இதனால், குளிர்ந்த நீரை ஒரு பாத்திரத்தில் காய்ச்சி பின்னர் அதனை பருகலாம். தாகம் எடுக்கும்போது தண்ணீர் பருகுவது ஒன்று தான் இதற்கு சரியான தீர்வாகும்.-Source:seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!