தினமும் காகத்திற்கு உணவு வைத்த பிறகு சாப்பிடுவது நல்லதா?


தினமும் காக்கைக்கு சாதம் வைத்த பிறகு தான் சாப்பிட வேண்டும் என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதற்கான காரணத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.

காக்கை என்பது இந்து மதத்தைப் பொறுத்த வரை முன்னோர்களின் வடிவம் என்றும், சனி கிரகத்தின் வாகனம் என்றும் இரு நிலைகளில் முக்கியமான பறவையாகக் கருதப்படுகிறது. தினமும் காக்கைக்கு சாதம் வைத்த பிறகு தான் சாப்பிட வேண்டும் என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தற்போது கிராமங்களில் மட்டுமே ஒரளவு இந்த தர்மம் கடைப்பிடிக்கப்படுகிறது. பித்ரு லோகத்தில் இருக்கும் நம் முன்னோர் நாம் அனுதினமும் செய்யும் தர்ப்பணம், தானம், தர்மம் போன்றவைகளினால் மிகுந்த திருப்தியும் சந்தோஷமும் அடைகிறார்கள்.

அவர்கள் ஆசிர்வாதம் தினமும் நமக்குக் கிடைப்பதனால் நாமும் நம் சந்ததியும் இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். எனவே நீங்கள் செய்யும் காரியம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் முன்னோரின் பூரணமான ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தருவதுடன் நவக்கிரக தோஷங்களையும் நீக்கும்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!