எந்த மாத்திரையும் போடாமல் சுக்குவான் இருமலை குணப்படுத்துவது எப்படி..?


சிலருக்கு சளி, இருமல் வந்துவிட்டால் சாமானியமாக நிற்காது. அதுவே நாளடைவில் அதிகமாகி, கக்குவானாக மாறிவிடும். அப்படி தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இருமலை எப்படி குணப்படுத்துவது?…

குணப்படுத்துவது என்பதை விட, பக்க விளைவுகள் இல்லாத மருந்து என்ன என்பதைப் பார்க்கலாம்.

1. படிகாரத்தைப் பொடி செய்து ஓர் அலுமினியப் பாத்திரத்தில் வைத்து, தினமும் மூணு வேளையும் ஒரு மிளகு அளவு எடுத்துச் சாப்பிட்டால் கக்குவான் இருமல் குணமாகும்.


2. கக்குவான் இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, பொன்னாவரை விதையைப் பசும்பால் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.

3. வெள்ளைப் பூண்டை தோல் உரித்து நெய்யில் வதக்கி, சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் கக்குவான் இருமல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும்.-Source:tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!