வயிறு முட்ட சாப்பிட்டவர்கள் மட்டும் இதை மறக்காம குடிங்க!


மதிய வேளையில் வயிறு முட்ட சாப்பிடுவதால் செரிமானத்தில் சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் இரவு நிம்மதியான தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம். இதற்கு தேங்காய் பாலில் மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த பானத்தை குடித்து வருவதால் ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கிறது.

தேவையான பொருட்கள்
இஞ்சி பவுடர் – 1
டீஸ்பூன் தேங்காய் பால் – 2 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் இஞ்சி, தேங்காய் பால், மஞ்சள், மிளகு தூள் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து, குறைவான தீயில் 5 நிமிடம் வைத்து இறக்க வேண்டும். பின் அந்த பானத்தில் தேன் கலந்தால் போதும். இந்த பானத்தை தினமும் இரவில் தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக குடித்து வந்தால், மறுநாள் காலையில் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

பானத்தின் பயன்கள்
பானத்தில் இஞ்சியை சேர்ப்பதால், இஞ்சியில் இருக்கும் சத்துக்கள் நமது உடலில் ஏற்படும் மாதவிடாய் வலிகள், குடலியக்க பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, உயர் கொலஸ்ட்ரால், ஆஸ்டியோபோரோசிஸ், சர்க்கரை நோய், வாந்தி, புற்றுநோய், எடை குறைவு போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.


தேங்காய் பாலில் வளமான அளவில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் உள்ளது. இதனால் இது புரோட்டீன் இழப்பைக் குறைத்து, செரிமான பிரச்சனைகள், திசுக்களின் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

மஞ்சளில் ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளதால், மூட்டு வலிகள், உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுதல், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தல், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. பானத்தில் தேன் கலப்பதால், இது தூக்கமின்மை மற்றும் சோர்வு நிலையை போக்கி ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது ரத்த சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!