நரம்புத் தளர்ச்சியை முற்றாக குணப்படுத்த சித்த வைத்தியம் சொன்ன இரகசியம் இதோ..!


நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தவே முடியாது என்றும் சிலர் ஆயுளுக்கு அதற்காக மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். அப்படியெல்லாம் கிடையாது. நம்முடைய நாட்டு மருத்துவத்தில் இவை எல்லாவறறுக்கும் தீர்வு உண்டு.

1. நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுபவர்கள், வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் விரைவில் குணம் பெறலாம்.

2. ஒருநாளுக்கு இரண்டு அத்திப் பழம் வீதம் தொடர்ந்து சில நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

3. வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.


4. நரம்புத் தளர்ச்சியும், மலச்சிக்கலும் உள்ளவர்கள், தங்கள் உணவில் அடிக்கடி கத்திரிக்காயைச் சேர்த்துக் கொண்டால், இரண்டு பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம்.

5. நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள், வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் உள்பட்டையை எடுத்து, நிழலில் காயவைத்துப் பொடியாக்கி, ஒரு டம்ளர் பாலில் அரை ஸ்பூன் கலந்து தினமும் ஒருவேளை மட்டும் குடித்து வந்தால், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

6. தக்காளியையும், நுால்கோலையும் உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டாலும், மாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலும் நரம்புத் தளர்ச்சியைப் போக்கலாம்.-
Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!