20.01.2020 இன்றைய ராசி பலன்


மேஷம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

ரிஷபம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் பெருகும்.

கடகம்
இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் சற்று குறையும்.

சிம்மம்
இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கன்னி
இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

துலாம்
இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

தனுசு
இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

மகரம்
இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.

கும்பம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.

மீனம்
இன்று திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபமுயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!