பொருளாதாரம் சீரழிகிறது.. ஊர் ஊராக சுற்றுகிறேனா? – நிர்மலா சீதாராமன் ஆவேசம்


ஊர் ஊராக சுற்றினாலும் எனது துறை சார் பணிகளை கோட்டை விட்டது கிடையாது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்ட விளக்கக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நிர்மலா சீதாராமனிடம் கேட்க விரும்பும் கேள்விகளை பார்வையாளர்கள் அதற்கான அட்டைகளில் எழுதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சமர்ப்பித்தனர். நிகழ்ச்சி நிறைவில் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு, நிர்மலா சீதாராமன் பதில் அளித்து கொண்டிருந்தார்.

அப்போது, ‘நிதி மந்திரியாக இருந்துகொண்டு குடியுரிமை சட்டம் குறித்து ஊர் ஊராக விளக்கம் அளித்து செல்கிறீர்களே… உங்கள் பணி பாதிக்காதா?’ என்று ஒருவரது கேள்வி நிர்மலா சீதாராமனுக்கு படித்து காட்டப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:-


இன்னும் 10 நாளில் பட்ஜெட் வர இருக்கிறது. அரசின் நிர்வாகத்தை, நல்ல விஷயங்களை மந்திரிகள், அதிகாரிகள் மக்களிடம் கொண்டு செல்வது தவறில்லையே. சமீபத்தில் பிரதமருடனான ஒரு ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை. உடனே எனக்கு பொறுப்பு இல்லை, பொருளாதாரம் சீரழிகிறது… கவலை இல்லையா… என்று விமர்சனம் தருகிறார்கள். என் துறையை நான் நல்லபடியாகவே பார்த்து கொள்கிறேன். ஊர் ஊராக சுற்றினாலும் எனது துறை சார் பணிகளை கோட்டை விட்டது கிடையாது. வேலையை அப்படியே விட்டுவிட்டு நான் ஊர் சுற்றவில்லை. என் மீதான விமர்சனங்களையும் நான் ரசிக்கிறேன். அதனால் எனக்கு கொஞ்சம் பொழுதுபோகிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!