முதல் முறையாக ஐந்து ஆண்டுகளில் ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்


கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கூகுள் செயலி ஃபேஸ்புக்கை முந்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தியிருக்கிறது.

கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னணி செயலிகள் பட்டியலை சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இந்த ஆய்வில் கடந்த ஒரு வருட கணக்கில் ஃபேஸ்புக் முன்னணியில் உள்ளது. கடந்த 12 மாதங்களில் ஃபேஸ்புக் செயலி சுமார் 300 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. கூகுள் செயலிகளை சுமார் 230 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.


உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலின் ஐந்தில் நான்கு செயலிகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமாக இருக்கின்றன. இவற்றில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இருக்கின்றன.

பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி கடந்த ஆண்டின் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2019 நான்காவது காலாண்டில் டிக்டாக் டவுன்லோடுகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு அதிகரித்தது.

கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது நான்காவது காலாண்டில் டவுன்லோடுகள் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் டிக்டாக் வருவாய் 2018 நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் 540 தவீதம் அதிகரித்து இருக்கிறது.

புகைப்படம் நன்றி: Sensor Tower-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!