பொழுதுபோக்கு இடங்களில் காணும் பொங்கலை கொண்டாட குடும்பத்துடன் குவிந்த மக்கள்


காணும் பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூங்காக்களிலும், சுற்றுலா மையங்களிலும் அலைகடலென திரண்ட மக்கள், குழந்தைகளுடன் பொழுதைக்களித்து குதூகலமடைந்தனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியிருக்கும் நிலையில், உழவர் திருநாளின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இன்று பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால், சென்னை மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா போன்ற இடங்களில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் கடல் நீரில் இறங்க தடை விதிக்கப்பட்டிருப்பதால், கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன,

இதேபோல், பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளிலும், தீவுத்திடல் பொருட்காட்சியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கில் குவிந்த மக்கள், குடும்பத்தினருடன் கடலில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் கோவிலிக்கு சென்று சுப்பிரமணியரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏராளமான மக்கள் குவிந்ததால் தனியார் விடுதிகள், மற்றும் கோவில் விடுதிகளில் கூட்டம் அலைமோதியது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!