வாட்ஸ்அப் தவறுதலாக அறிமுகம் செய்த புதிய வசதி பற்றி தெரியுமா..?


வாட்ஸ்அப் க்ரூப் சாட்களின் போது ஒருவருக்கு மட்டும் தனியே பதில் அனுப்பும் ரிப்ளை பிரேவேட்லி ( ‘Reply Privately’) எனும் வசதியை தவறுதலாக விண்டோஸ் பீட்டா செயலியில் வாட்ஸ்அப் வழங்கியுள்ளது.

அதன்படி புதிய அம்சம் மூலம் விண்டோஸ் போன் பயனர்கள் க்ரூப் சாட் செய்யும் போது மற்றவர்களுக்கு தெரியாமல் ஒருவருக்கு மட்டும் பதில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது.

விரைவில் மற்ற அம்சங்களுடன் ரிப்ளை பிரைவேட்லி அம்சமும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பிரைவேட் ரிப்ளை அம்சம் வாட்ஸ்அப் பீட்டா செயலியில் காணப்பட்டு அதன்பின் நீக்கப்பட்டு விட்டது. டெவலப்பர்கள் சார்பில் இந்த அம்சம் தவறுதலாக இயக்கப்பட்டு விட்டதாக @WABetaInfo சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்டோஸ் போன்களுக்கான வாட்ஸ்அப் பீட்டா 2.17.344 பதிப்பில் பிரைவேட் ரிப்ளை அம்சம் நீக்கப்பட்டுள்ளது. முந்தைய 2.17.342 பதிப்பில் இந்த அம்சம் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக @WABetaInfo ட்விட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இந்த அம்சம் 2.17.348 பதிப்பில் வழங்கப்பட்டது.

புதிய பிரைவேட் ரிப்ளை அம்சம் க்ரூப் சாட்களுக்கு மட்டும் சேர்க்கப்படும் என்றும் இந்த அம்சம் வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட குறுந்தகவலை தொடர்ந்து கிளிக் செய்ததும் தோன்றும் சிறிய மெனு மூலம் இயக்க முடியும். முன்னதாக இதே அம்சத்தை வெற்றிகரமாக இயக்க முடியாத நிலையில் பல்வேறு பிழைகளுடன் காணப்பட்டது.

மற்ற அம்சங்கள் 2.17.336 மற்றும் 2.17.346 விண்டோஸ் பீட்டா செயலியில் காணப்பட்டுள்ளது. இதில் அழைப்புகளை மேற்கொள்ள புதிய வடிவமைப்பு (UI) வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க ஆண்ட்ராய்டு போன்றே காட்சியளிக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ள குவிக் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளதால், வாய்ஸ் கால்களை ஒற்றை கிளிக் மூலம் வீடியோ காலாக மாற்ற முடியும்.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!