தலைமுடியின் பொலிவிக்கும் வலிமைக்கும்.. மாம்பழத்தை இப்படி தலையில தேயுங்க..!


தலைமுடியை பராமரிப்பது தான் நம்முடைய மிகப்பெரிய சவால். பொடுகு, தூசுக்கள், தலைமுடி வறட்சி, தலைமுடி உதிர்தல் போன்ற பல பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டும்.

தலைமுடி உதிராமல் தவிர்க்க என்ன செய்வது என்று யோசித்தே இன்னும் அதிகமாக முடி கொட்ட ஆரம்பித்துவிடும். அதற்கு விலையுயர்ந்த ஷாம்பு என தலைமுடியை பராமரிப்பதற்குள் புாதும் போதுமென்றாகிவிடும்.


ஆனால் நம்முடைய வீட்டில் பல இயற்கைப் பொருள்களை வைத்தே மிக ஆரோக்கியமான முறையில் தலைமுடியைப் பராமரிக்க முடியும் என்பது நமக்குத் தெரிவதில்லை. குறிப்பாக, அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்துவது உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும்.

நாம் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுகிற ஒன்று தான் முக்கனிகளில் ஒன்றான மாம்பழம். அதை தலையில் தேய்த்தால் தலைமுடி பளபளப்பாக்கும் என்பது இதுவரை நமக்குத் தெரியவே தெரியாது.


மாம்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் மற்றும் கற்றாழை சேர்த்து வேர்க்கால்களிலிருந்து தலைமுடி நுனிவரை பரவலாக தேய்த்து 1/2 மணி நேரம் உலரவிட்டு பின் கூந்தலை அலசவும்.

மாம்பழத்தை ஸ்கால்ப்பில் தேய்ப்பதால் கூந்தலுக்கு புத்துயிர் கிடைக்கும். மாம்பழத்தில் உள்ள ஆன்டி- ஆன்ஸ்டன்ட்கள் முடிக்கும் ஸ்கால்ப்பிற்கும் ஊட்டமளித்து சிறந்த பொலிவையும் வலிமையையும் கொடுக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!