புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்


சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனின் விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டூயல் சிம் ஸ்லாட், எஃப்.எம். ரேடியோ வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ01 சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் பிராசஸர்
– 2 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– எஃப்.எம். ரேடியோ
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!