முன்னாள் மனைவியை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபல இயக்குனர்..!


காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் விவாகரத்து செய்தோமா தனித்தனியாக பிரிந்தோமா என்று சில சினிமா ஜோடிகள் தங்கள் வேலையை பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். ஆனால் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மாஜி மனைவியை மறக்க முடியாமல் தவிக்கிறார். அவரது மனைவி லிசி ஒரு பிரபல நடிகை. கமல் நடித்த விக்ரம் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் ஆனந்த ஆராதனை, மனசுக்குள் மத்தாப்பு, பகலில் பவுர்ணமி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். பிரியதர்ஷனும் லிசியும் காதலித்து மணந்தனர். இவர்களது திருமணம் கடந்த 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இவர்களுக்கு கல்யாணி, சித்தார்த் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.


25 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமீபத்தில் பிரியதர்ஷன், லிசி திருமண நாள் வந்தது.

லிசியுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை நினைவுகள் பிரியதர்ஷன் மனதில் திரும்பிவந்தது. இதையடுத்து தனது உணர்வை டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தினார். அதில், ‘நினைவுகளுக்கு என்றும் மரணமில்லை… டிசம்பர் 13, 1990’ என தனது திருமண நாளை குறிப்பிட்டிருந்தார். பிரியதர்ஷன், லிசி தம்பதியின் மகள் கல்யாணி தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரியதர்ஷன், மோகன்லால் நடிக்கும் மரக்கர் படத்தை இயக்கி வருகிறார். லிசி தனது அலுவலக நிர்வாகங்களை கவனித்து வருகிறார்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!