குப்புறப்படுத்து தூங்குபவரா நீங்கள்..? இத படித்தால் இனி யோசிப்பீங்க..!


குப்புறப்படுத்து தூங்குவதைத்தான் நிறைய பேர் விரும்புகிறோம். இதனால் வயிற்றிலுள்ள உறுப்புகள் பாதிக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இது பெரியவர்களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை என்றாலும் முதுகுவலி உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

குப்புறப்படுப்பது உங்களுக்கு மிகவும் பிடித்தால், வயிற்றிற்கு அடியில் ஒரு தலையணையை வைத்து தூங்க வேண்டும். இதனால் முதுகில் உண்டாகும் அழுத்தம் தடுக்கப்படுகிறது.

நேராக முதுகு படுக்கையில் படும்படி நீங்கள் படுத்தால், தலையணை முட்டிக்கு அடியில் வைக்க வேண்டும். இதனால் வடிவம் மாறாமல் முதுகிற்கு தரமுடியும்.

ஒருக்களித்து படுப்பவர்கள் கால்களை மடக்கி நெஞ்சிற்கு அருகில் குறுகிக் கொள்ள வேண்டும். இருகால்களுக்கு நடுவே தலையணை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் முதுகு பகுதிக்கு சிரமம் வராமல் தடுக்க முடியும்.

எப்படி படுத்தாலும் முதுகுவலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கவனிக்காவிட்டால் முதுகு இன்னும் பாதித்து எலும்பு தேய்மானம், டிஸ்க் பிரச்சனையாக மாறிவிடும்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!