தோனிக்கு 41 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்த ரசிகர்கள்.!

தோனியின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் 41 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர்.

கிரிக்கெட் உலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் மகேந்திர சிங் தோனி. தல, மகி என ரசிகர்கள் இவரை செல்லமாக அழைப்பார்கள்.

சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.

அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்று இந்தியாவின் கனவை நினைவாக்கினார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் 41-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேனியின் 41 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் அமைத்து உள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!