படிச்சது பிளஸ் டூ…. 43 வயதில் சிக்கிய போலி டாக்டர்..!


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட மேல் திருத்தணி பகுதியில், திருவள்ளுவர் தெருவில், போலி மருத்துவர் ஒருவர் பலருக்குச் சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி, திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் அந்த பகுதியில் சோதனை நடந்தது.

அப்போது ஒரு வீட்டில் சோதனை செய்தபோது ஆங்கில மருத்துவம் வழியில் சிகிச்சை அளிக்கும் சாதனங்கள் பல இருந்தன. அவர்களிடம் நடந்த விசாரணையில், அந்த வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியன் என்பதும், இவர் மனைவி வேளாங்கண்ணி என்பதும் தெரியவந்தது. மேலும், வேளாங்கண்ணிதான் மருத்துவம் பார்த்து வருவதும் கண்டறியப்பட்டது.

வேளாங்கண்ணி பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் பல நாட்களாக, இந்த பகுதியில் மருத்துவரைப்போல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வேளாங்கண்ணி போலியான மருத்துவர் எனக் கூறி அவரை திருத்தணி காவல் நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.

மாவட்ட சுகாதாரத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் போலி மருத்துவரைத் திருத்தணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வேளாங்கண்ணியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!