இந்த வகை போன்களில் டிசம்பர் 31-ம் தேதியிலிருந்து வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்..!

வாட்ஸ்அப் சேவை வழங்கப்பட்டு வரும் மொபைல் போன்களில் சில மாடல்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி முதல் சேவையை நிறுத்த வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளதை வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி பிளாக்பெரி ஓ.எஸ்., பிளாக்பெரி 10 மற்றும் விண்டோஸ் போன் 8.0 உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. இதனால் பிளாக்பெரி மற்றும் வின்டோஸ் இயங்குதள மொபைல் போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் 2018-ம் ஆண்டின் முதல் நாள் முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் பிளாக்பெரி மற்றும் நோக்கியா எஸ்40 இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வாக்கில் நோக்கியா எஸ்60 தளங்களில் வாட்ஸ்அப் நிறுத்தப்பட்டது. தற்சமயம் டிசம்பர் 31-2018 முதல் நோக்கியா எஸ்40 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.


இதேபோன்று வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் பழைய பதிப்புகளில் பிப்ரவரி 1, 2020-ம் ஆண்டு முதல் நிறுத்தப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சாதனங்களை பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களை புதிய ஆண்ட்ராய்டு, விண்டோஸ் 10 மற்றும் ஐபோன்களை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

இத்துடன் WABetaInfo வெளியிட்டுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் 2.7315 பதிப்பு இரண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பிரைவேட் ரிப்ளை அம்சம் மற்றும் பிக்சர்-இன்-பிக்சர் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா 2.17.424, 2.17.436 மற்றும் 2.17.437 முறையே ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன் தளங்களில் ஒரே கிளிக் செய்து அன்பிளாக் செய்யும் வசதி, அட்மின் செட்டிங் மாற்றப்பட்டிருக்கிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!