தலையை காணவில்லை.. முள்ளுச் செடியில் கிடந்த உடல்.. கள்ளக்காதலினால் அரங்கேறிய பயங்கரம்!


சுரேஷின் தலையை காணவில்லை.. முள்ளு செடியில் முண்டத்தை மீட்ட போலீசார், இது சம்பந்தமான தேடல், விசாரணையில் இறங்கி உள்ளனர்.

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஒரு ரவுடி.. கிரிமினல் சுரேஷ் என்றால்தான் இந்த பகுதியில் தெரியும். 31 வயது!

ஆட்டோ ஓட்டிவந்தார், இருந்தாலும் சுற்றுவட்டார பகுதிகளில் நிறைய கேஸ்கள் இவர் மீது ஸ்டேஷனில் உள்ளன. இந்நிலையில், போன 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே போன சுரேஷ், அதுக்கப்புறம் திரும்பி வரவே இல்லை. இதனால் சுரேஷின் அம்மா கொரட்டூர் போலீசார் புகார் தரவும், அவரை தேடி வந்தனர்.

இது சம்பந்தமான விசாரணை நடந்தபோது, சுரேஷூக்கு பாடி கலைவாணர் நகரைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாகவே கொலை நடந்திருக்கலாம் என்றும் விஷயம் வெளியே வந்தது. இது சம்பந்தமாக கார்த்திகா – ஜெயகொடி தம்பதியினரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது, “சுரேஷ் எங்க வீட்டுக்கு அத்துமீறி நுழைஞ்சு வந்துவிட்டான்.. அதனால அவனை அடிச்சு உதைச்சு கட்டி போட்டோம்.. ரொம்ப அடிச்சிடவும் காயம் அதிகமாயிடுச்சு.. அதனால ஆஸ்பத்திரிக்கு ஒரு ஆட்டோவுல கொண்டு போனோம்.. அப்போ சுரேஷ் தப்பி ஓடிவிட்டான்” என்றனர்.

ஆனாலும் தம்பதி சொன்ன இந்த கதையை போலீசார் நம்பவே இல்லை என்பதால், தங்கள் பாணி விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் கொலை செய்தோம் என்று ஒப்புக் கொண்டனர்.

“கள்ள உறவு வேண்டாம் என்று நல்லபடியாக பேசதான் சுரேஷை அழைத்தோம். ஆனால், வாக்குவாதம் முற்றிவிட்டது. அப்பதான் ஆத்திரம் அதிகமாகி சுரேசை வெட்டிக்கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை மட்டும் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் அருகே முட்புதரில் வீசிவிட்டோம்.. தலையை வேறு எங்கியோ ஒரு ஒரு இடத்தில் வீசிவிட்டோம்” என்றனர்.

இதையடுத்து விளாங்காடுபாக்கத்துக்கு விரைந்து சென்ற போலீசார், முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சுரேசின் தலையில்லாத உடலை மீட்டனர். ஆனால் சுரேசின் தலையை காணவில்லை. அதை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!